ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றிருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேசினார்.
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் ஜி 7 அமைப்பின் உச்சி மாநாடு, 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா அழைக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி, ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு சென்றுள்ளார். அங்கு, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை நேரில் சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி 7 உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். அவர்களும் ஜப்பான் சென்றுள்ளனர். இதற்கிடையே, ஹிரோஷிமா நகரில், மகாத்மா காந்தி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.