கட்சி மாறி வாக்களித்த எம்.பி., எம்எல்ஏக்கள்... அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்
குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவாக எம்.பி., எம்.எல்.ஏக்கள் பலர் கட்சி மாறி வாக்களித்தது தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 17 பேர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 126 எம்எல்ஏக்கள், கட்சி மாறி முர்முவுக்கு ஆதரவாக வாக்கை பதிவு செய்துள்ளனர்.
இதன்படி, அசாம் மாநிலத்தில் 22 எம்எல்ஏக்களும், குஜராத்தில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள், மகாராஷ்டிராவில் 16 எம்எல்ஏக்கள், மத்திய பிரதேசத்தில் 19 எம்எல்ஏக்கள் முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஜார்கண்டில் 10 பேரும், சட்டீஸ்கரில் 6 பேரும், கோவாவில் 4 சட்டமன்ற உறுப்பினர்களும் பிகாரில் 6 பேரும் முர்முவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்கை பதிவு செய்துள்ளனர்.
இதேபோன்று மேகாலயாவில் 7 எம்எல்ஏக்களும், இமாச்சல் பிரதேசத்தில் 2 பேரும், ஹரியானா, அருணாச்சலப் பிரதேசம், கேரளாவில் தலா ஒரு சட்டமன்ற உறுப்பினர் என ஒட்டுமொத்தமாக 126 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தனர்.
இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநரத்தில், திமுக கூட்டணி சார்பில் 159 வாக்குகள் பதிவான நிலையில் ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டு 158 வாக்குகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது.