கணவனுக்கு தெரியாமல் கர்ப்பம்... குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

Update: 2022-08-17 13:42 GMT

கேரள மாநிலம் இடுக்கியில் பச்சிளங் குழந்தையை வாளி தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். தொடுபுழா கரிமண்ணூரைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண்ணுக்கு கடந்த 10ம் தேதி இரவு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை வாளி நீரில் மூழ்கி கொலை செய்த சுஜாதா அதீத ரத்தப் போக்கின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுஜாதாவிடம் மருத்துவர்கள் விசாரித்த போது, குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டதாகத் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், தான் கர்ப்பமாக இருப்பது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தெரியாது என்பதால் குழந்தையைக் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சுஜாதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் அவரைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்