சென்னை, கோயம்பேட்டில் தன்னை திட்டியவரை பழிவாங்க அவரின் இரு சக்கர வாகனத்திற்கு மது போதையில் நபர் தீ வைத்த நிலையில், 16 இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து கருகிய சம்பவம் அரங்கேறியுள்ளது...
மதுரவாயல் அருகே காலிமணையில் உள்ள குடிசையில் நிறுத்தப்பட்ட 16 இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், தமிழ் புத்தாண்டின் போது சம்பவம் நடைபெற்ற காலிமனையில் ராமச்சந்திரன் மதுபோதையில் உறங்கியுள்ளார். அப்போது, அவரின் செல்போன் மற்றும் பணம் திருடப்பட்ட நிலையில், இது குறித்து விசாரிக்கும் போது அதே பகுதியை சேர்ந்த அருள் என்பவருடன் ராமச்சந்திரனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் அருளின் வாகனத்துக்கு மது போதையில் ராமச்சந்திரன் தீ வைத்த நிலையில், அது 16 வாகனங்களுக்கும் பரவி விபத்து அரங்கேறியது தெரியவந்தது. இதையடுத்து, ராமச்சந்திரனை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்