- உத்தரகண்ட் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- இமயமலையின் கீழ் அமைந்துள்ள புவித்தட்டுகள் நகர்வதால், உத்தரகண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
- இந்நிலையில், இமயமலையில் அமைந்துள்ள, நேபாள நாட்டின் பாஜுரா(Bajura) நகரில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- ரிக்டர் அளவில் 5 புள்ளி 2ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், உத்தரகண்ட் மாநிலத்தில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதேபோல், டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.