"இவ்ளோ சீக்கிரம் பஸ் கிடைக்கும்னு நினைக்கல" - பொங்கல் சிறப்பு பேருந்துகளால் பயணிகள் மகிழ்ச்சி

Update: 2023-01-13 05:29 GMT

பொங்கல் பண்டிகைக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அதிக பேருந்துகள் இயக்கப்படுவதாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவை கடந்தும் சிறப்பு பேருந்துகளில் மக்கள் பயணித்தனர்.

குறிப்பாக திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் அதிகம் பேர் பயணித்தனர். பேருந்துகள் உடனுக்குடன் கிடைப்பதாகவும், அதனால் சிரமம் இல்லாமல் பயணிப்பதாகவும் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்