புதுச்சேரியில், இளைஞரை ஓட ஒட விரட்டி வெட்டிக் கொலை - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

Update: 2023-02-08 23:38 GMT

புதுச்சேரியில், முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓடஒட விரட்டி வெட்டிக் கொலை செய்த வழக்கில், 7 பேரை போலீசார் கைது செய்தனர்.


புதுச்சேரி அரியாங்குப்பம் பெரியார் சிலை அருகே, பிரவீன் என்பவரை, மர்ம கும்பல் ஒன்று ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஒடியது.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரவினின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், 4 பேர் கொண்ட கும்பல், பிரவீனை துரத்திச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.


இந்த கொலை வழக்கு சம்பந்தமாக ஆகாஷ், மனோ, கவி, ஜான், ஷேக், சீனிவாசன், கார்த்தி ஆகிய 7 பேரை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஏற்கனவே பிரவீன் மீது, ஜிம் பாண்டியன் என்பவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.


அதற்கு பழிக்கு பழியாக இந்தக் கொலை நடைபெற்றதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்