"காங்கிரஸ் கணக்கு மூடப்பட்டு விட்டது" "எதிர்கட்சிகள் சேற்றை வாரி இறைத்தாலும்" "தாமரை மலரும்" - பிரதமர் மோடி

Update: 2023-02-10 05:22 GMT

எதிர்க்கட்சிகள் எவ்வளவு தான் சேற்றை வாரி இறைத்தாலும், அதில் தாமரை மலரும் என பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை வழங்கினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கவில்லை என, குற்றம் சாட்டினார். மக்கள் பிரச்சினை குறித்து காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை என விமர்சித்தார்.

60 ஆண்டுகளாக காங்கிரஸ் நாட்டை சீரழித்து விட்டது என்றும், காங்கிரஸ் கட்சியின் கணக்கு மூடப்பட்டு விட்டதாகவும் பிரதமர் மோடி புகார் தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்பு, விருப்பங்களை நிறைவேற்ற இரவு பகலாக பாஜக அரசு பணியாற்றி வருவதாகவும், உஜ்வாலா திட்டத்தின் கீழ், 14 கோடி எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பாஜகவின் வாக்குறுதிகள் அனைத்தும் கற்களில் பொறிக்கப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் பதிலுரையின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள். கூச்சலிட்டதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, எதிர்கட்சிகள் எவ்வளவு தான் சேற்றை வாரி இறைத்தாலும், அதில் தாமரை மலரும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்