தூத்துக்குடி மாவட்டத்தை ஏமாற்றிய பருவமழை...லாரி தண்ணீரை நம்பி இருக்கும் அவலம் - பயிர்களை காப்பாற்ற போராடும் விவசாயிகள்

Update: 2022-12-22 02:24 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய மழை இல்லாத‌தால், விவசாயிகள் லாரி தண்ணீர் வாங்கி, பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்..

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை விட மிகவும் குறைவாகவே பெய்துள்ளது.. இதனால், விளாத்திகுளம், சூரங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் கம்பு, சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை, பயிரிட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை இல்லாத‌தால் பயிர்கள் வெயிலில் கருகி வருகின்றன.. பல இடங்களில் மிளகாய் விதைகள் விதைக்கப்பட்டு சிறிய செடிகளாக வளர்ந்துள்ளதால், அவற்றை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.. இதற்காக, ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து டிராக்டர் மூலம் தண்ணீர் வாங்கி, கூலி ஆட்கள் மூலம் மிளகாய் செடிகளுக்கு ஊற்றி வருகின்றனர். இன்னும் சில தினங்களுக்குள் மழை பெய்தால் மட்டுமே மிளகாய் செடியை காப்பாற்ற முடியும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்