கணவனை புதுக்கோட்டையில் வெட்டி உடல் துண்டுகளை சென்னையில் புதைத்த மனைவியின் போட்டோ வெளியீடு

Update: 2023-04-11 05:32 GMT

சென்னை விமானநிலைய ஊழியர் கொடூர கொலை வழக்கில், கைதான பெண் பாலியல் தொழிலாளியை, வரும் 24ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை விமானநிலையத்தில் பணியாற்றி வந்த ஜெயந்தன் என்பவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி, கோவளம் பகுதியில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், பாக்கியலட்சுமி, வேல்முருகன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், போலீசார் கொலை செய்யப்பட்ட ஜெயந்தனின் உடல் பாகங்களை தேடி வந்த நிலையில், கோவளம் பூமிநாதன் கோவில் அருகில் உள்ள குட்டையில் இருந்து, 2 பாலித்தின் கவர்களில் எரிந்த நிலையில் தலை, உடல் பாகங்களை போலீசார் மீட்டனர். இந்த கொலை வழக்கில் முக்கிய நபரான பாக்கியலட்சுமியை போலீசார் கைது செய்த நிலையில், அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, பாக்கியலட்சுமியை வரும் 24ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்