பி எச் டி மாணவிக்கு வந்த போன் கால்..மொத்த பணமும் அபேஸ்..அப்பாவிகளை குறிவைக்கும் கொரியர் ஸ்கேம்!
பல ரூபங்களில் மிரட்டி வரும் டிஜிட்டல் கொள்ளையர்கள், தற்போது கொரியர் ஸ்கேம் என்ற புதிய ஆயுதத்தை கையில் எடுத்து பல கோடி ரூபாயகளை சுருட்டி வரு கின்றனர் . இதுகுறித்து வி வரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வந்த பிறகு, பல்வேறு தேவைகளுக்காக பணத்தை கையிலெடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் குறைந்துள்ளது. இது மக்கள் மத்தியில் ஒரு வகையான பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியது.
ஆனால் அந்த பாதுகாப்பு உணர்வு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை, பாக்கெட்டில் இருந்து பர்ஸை பிட்பாக்கெட் அடிப்பது போல, போனில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கவும் டிஜிட்டல் கொள்ளை கும்பல்கள் உருவாகிவிட்டது.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புது புது யுக்தியகளை கையாண்டு, சைபர் கிரைமையும், மக்களையும் ஒரு சேர அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது கொரியர் ஸ்கேமை தொடங்கியுள்ளானர் டிஜிட்டல் கொள்ளையர்கள்.
பெங்களூரை சேர்ந்த பி எச் டி மாணவிக்கு வந்த ஒரு அழைப்பில், பிரபல கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒருவர் பேசியுள்ளார். அதில் உங்களுக்கு வந்த கொரியரில், சட்டவிரோதமான போதை பொருட்கள் இருந்ததாக கூறியுள்ளார்.
பிரபலமான கொரியர் நிறுவனம் என்பதால் அவர் பேசியதை உண்மை என்று எண்ணி மாணவி பீதியடைந்துள்ளார். இந்நிலையில், போன் செய்த நபர் மற்றொருவருக்கு அழைப்பை இணைத்துள்ளார்.
அவரோ, தான் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரி என்றும் கொரியரில் மாணவியின் விவரங்கள் இருப்பதாகவும், இதனால் மாணவிதான் போதை பொருள் விற்பனை செய்வதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
பயத்தில் செய்வதறியாது திகைத்த மாணவியிடம் சுய விவரங்களை சரிப்பார்க்க வேண்டும் என கூறி, ஸ்கைப் மூலம் வீடியோ காலில் இணைந்து விசாரணை நடத்தியதுடன், அரசு ஆவணங்களை போலியாக உருவாக்கியும் மாணவியை மிரட்டியுள்ளனர்.
பின்னர் மாணவியின் ஆதார், வங்கி கணக்கு உட்பட பல விவரங்களை சேகரித்து வைத்து கொண்டு, பணம் கொடுத்தால் விடுவித்துவிடுவதாக மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அரசாங்க முத்திரையுடன் அதிகாரி தோரணையில் மிரட்டியதால் பதறிப்போன மாணவி, தப்பித்தால் போதும் என்று 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். பணத்தை பெற்று கொண்ட கும்பல் அத்தோடு எஸ்கேப் ஆகிவிட்டது.
இந்த கொரியர் ஸ்கேம் எலி பொறியில் இந்த மாணவி மட்டுமன்றி, ஐடி ஊழியர்கள், டாக்டர், தொழிலதிபர் உட்பட பலரும் சிக்கி கோடிக்கணக்கில் பணத்தை பறிகொடுத்துள் ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க, முன் பின் தெரியாத அழைப்புகளை தவிர்க்க வேண்டும் அல்லது கவனமாக கையாள வேண்டும் என்றும், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர் காவல்துறையினர்