தமிழகத்தில் டூட்டிக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணி போலீஸ் கோர பலி.. பாரீனில் துடிக்கும் கணவன்
பள்ளத்துபட்டியில் இருந்து நிறைமாத கர்ப்பிணி காவலர், பைக்கில் மண்டையூர் காவல்நிலையத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த கார், பெண் காவலர் பைக் மீது மோதியுள்ளது. இதில் நிலைக்குலைந்து கீழே விழுந்த கர்ப்பிணி காவலர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த மண்டையூர் போலீசார், காவலர் விமலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்திற்கு காரணமான கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் உள்ள காவலரின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணி காவலர், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சக போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.