"அதுவும் ஒரு உயிர் தான்" ..தூங்காநகரை அதிரவைத்த விபத்து..நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்

Update: 2024-11-28 08:53 GMT

கோரிப்பாளையம் பகுதியில் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை தல்லாகுளம் பகுதியில் இருந்தும், ஸ்டேஷன் பகுதியில் இருந்தும் இதற்கான இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இரும்பு சாரம் அமைத்து பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிமெண்ட் கலவை வேலை நடைபெற்றபோது, திடீரென இரும்பு சாரம் முழுமையாக சரிந்து விழுந்தது. அப்போது 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு வேலைசெய்து கொண்டிருந்த நிலையில், விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்