விருதுநகர் மாவட்டம் முடுக்கன்குளத்தில் மருத்துவ கழிவுகளின் வாகன வழிப்பாதை விவகாரம் தொடர்பாக நடைபெற்ற சமாதான கூட்டத்தில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
முடுக்கன்குளத்தில் தனியார் மருத்துவ கழிவு எரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு லாரிகளில் எடுத்து வரப்பட்ட மருத்துவ கழிவுகள் சாலைகளில் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் சுமார் 5 மணி நேரம் சாலைமறியலில் ஈடுபட்டனர். மருத்துவ கழிவுகளை கொண்டு செல்லும் லாரிகள், மக்கள் பயன்படுத்தும் சாலையில் இயக்க கூடாது என அவர்கள் வலியுறுத்தினர். திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன், காரியாபட்டி மண்டல துணை வட்டாச்சியர் சிவனாண்டி உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, முடுக்கன்குளம் - நரிக்குடி சாலை வழியாக மருத்துவ கழிவு வாகனங்கள் செல்லாது என எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனால் சமாதானம் அடைந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்