பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ஃபீலேவின் உடல்நிலை கவலைக்கிடமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு புற்றுநோய்க் கட்டியை அகற்றிய ஃபீலே, சில தினங்களுக்கு முன்பு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஃபீலேவின் உடல்நிலை மோசமாகி வருவதாக கூறப்படுகிறது.
கெமோதெரபி சிகிச்சை ஃபீலேவிற்கு ஒத்துவரவில்லை என்றும், ஃபேலியேட்டிவ் கேர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இதனிடையே, ஃபீலே நலம்பெற கால்பந்து ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.