"காங்கிரஸ் உருவாக்கியதற்கு மாறாக ஜிஎஸ்டி உள்ளது"| ப. சிதம்பரம் பேச்சு

Update: 2022-06-25 20:23 GMT

கல்வி, சுகாதாரம் இரண்டும் மாநில அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெற முடியும் என மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அனைத்து இந்திய தொழில்முறை காங்கிரஸ் அமைப்பு சார்பில், சென்னையில் நடைபெற்ற "காங்கிரஸ் எக்னாமிக் மாடல்" எனும் கருத்தரங்க நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே அளவீட்டில் குறைந்த தொகையில் வசூலிக்கும் வகையில், GST வரியை காங்கிரஸ் உருவாக்கியதாக தெரிவித்தார். ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.டி, அதற்கு மாறாக உள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.

பசியால் வாடுபவர் நாடுகளின் பட்டியலில் இந்தியா 140 நாடுகளில் 101 வது இடத்தில் உள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலையில் உள்ளதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மேலும், கல்விக்காக மாணவர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், எனவே கல்வி, சுகாதாரம் இரண்டும் மாநில அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெற முடியும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்