வாடகைக்கு இருந்தவர்களை அடித்து, கடைகளை நொறுக்கிய ஓனர் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

Update: 2023-04-24 14:46 GMT

கட்டடத்தைக் காலி செய்யாத ஆத்திரத்தில் வாடகைதாரர்களின் கடைகளை உரிமையாளர் ஆத்திரத்தில் அடித்து நொறுக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலை பகுதியை சேர்ந்த உமருல்லா என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆம்பூரை சேர்ந்த 3 பேர் கடைகளை வாடகைக்கு எடுத்து மருந்து கடைகளை நடத்தி வந்துள்ளனர். உமருல்லா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தை சுபாஷ் சந்திர போஸ் என்பவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடைகளை காலி செய்ய அவகாசம் வேண்டி ஹரி கிருஷ்ணன், சுரேஷ், ஆகியோர் 2019ல் நீதிமன்றத்தை நாடி வழக்கு நிலுவையில் உள்ளது... கடைகளை காலி செய்ய சொல்லி சுபாஷுக்கும் கடைக்காரர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த மாதம் அவர் மேல் தள கட்டடத்தை இடித்துள்ளார்... அப்போதே ஹரி கிருஷ்ணனை சுபாஷின் ஆட்கள் கடையில் புகுந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகார் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் கொண்ட கும்பல், வாடகைதாரர் சுரேஷ் மற்றும் அவரது கடையில் பணியாற்றும் சிலரை அடித்து கடையை விட்டு வெளியேற்றிவிட்டு, அங்கிருந்த பொருட்களை துவம்சம் செய்து காரில் ஏறி சென்றுள்ளனர். இது குறித்து மருந்து கடை உரிமையாளர் சுரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்