கேரள மாநிலம் கோட்டயம் மாவட்ட ஆட்சியராக, மதுரையை சேர்ந்த விக்னேஷ்வரி பொறுப்பேற்றார். 2015ஆம் ஆண்டு கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான விக்னேஷ்வரி, அம்மாநில கல்லூரி கல்வித்துறை இயக்குனர், சுற்றுலா மேம்பாட்டுக் கழக இயக்குனர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இவரது கணவர் உமேஷ் என்பவரும் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.