கோயில் கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு - "அம்மன் வந்து சொல்லட்டும்" காவல் ஆய்வாளர்..

Update: 2023-04-12 02:14 GMT

ஆம்பூர் அடுத்த வடகரை கிராமத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கிடைத்த அம்மன் சிலையை, அதே இடத்தில் பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்பி கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். கோயில் அமைந்துள்ள இடத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி கட்டிடம் அமைக்க அரசு நிதி ஒதுக்கியது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வருவாய் துறை அதிகாரிகள், கோயில் கட்டிடத்தில் மின் இணைப்பை துண்டித்து, ஜேசிபி மூலம் இடிக்க முயன்றனர். கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனின் வாகனத்தை சிறை பிடித்தனர். அந்த இடத்தில் கோயில் இருக்க வேண்டும் என்றால், அதை அம்மனே வந்து சொல்லட்டும் என காவல் ஆய்வாளர் யுவராணி, கிராம மக்களிடம் தெரிவித்தார். அப்போது திடீரென கோயில் பூசாரி வெங்கடேசன் அருள் வந்து ஆடினார். இந்த இடத்தில் குடியிருக்க விரும்புகிறேன் - அப்புறப்படுத்த வேண்டாம் என தெரிவித்தார். இதையடுத்து, கோயில் கட்டிடத்தை இடிக்கும் பணியை கைவிட்டு போலீசார் அங்கிருந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்