கொங்கு மெஸ்சில் சீல்-ஐ அகற்றி அதிரடியில் ஈடுபட்ட அதிகாரிகள்..கரூரில் IT ரெய்டால் பரபரப்பு
கரூர் கோவை சாலையில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உணவகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
அந்த உணவகத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு சீல் வைத்த நிலையில், சீல் அகற்றப்பட்டு வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நான்கு கார்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், மத்திய துணை ராணுவப் படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே ராயனூர், கொங்கு அவன்யூ பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்ற சுப்பிரமணி வீட்டிலும் நேற்று காலை முதல் சோதனை நடைபெற்றது.