"எக்ஸ்பைரியான மாத்திரைனு நர்ஸ் சொல்றாங்க.." "புள்ள மேல போய் சேர்ந்துருச்சு சார்.."துடிதுடித்து அழுத உயிரிழந்த மாணவியின் தாய்
- நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சத்து மாத்திரையை, அதிகளவில் உட்கொண்ட 8 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வரும் நிலையில், அனைவருக்கும் சுகாதரத்துறையின் கீழ் சத்துமாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
- இதில், சில மாணவர்களுக்கு அதிகளவில் சத்து மாத்திரைகள் கிடைத்த நிலையில், யார் அதிகமான மாத்திரைகளை உட்கொள்வது என மாணவர்களுக்கிடையே போட்டி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- இந்நிலையில், அதிகளவு சத்து மாத்திரைகளை உட்கொண்ட 4 மாணவிகள் உட்பட 6 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- இதில், 8 ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி ஜெய்பா பாத்திமாவின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், செல்லும் வழியிலே மாணவி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- இந்த விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்த மாணவியின் தாய் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இது குறித்து உயிரிழந்த மாணவியின் பெற்றோர் தெரிவித்ததை தற்போது பார்க்கலம்.