ரஷ்யா அமெரிக்கா இடையே அணு ஆயுதப்போர்.? 500 கோடி உயிரிழப்பா.? அதிர்ச்சி தரும் ஆய்வு தவல்கள்.!!
அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ஆறு வகை அணு ஆயுத போர்களின் விளைவுகள்
பற்றி ஆராயப்பட்டுள்ளது. போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், அதன் விளைவாக ஏற்படும் தீ கோளங்களினால், காற்றில் பெரிய அளவில் புகைக்கரி கலக்கும் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிப்படையும் என்று இந்த அறிக்கை கூறுகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால், உலக அளவில் உணவு உற்பத்தி ஐந்து ஆண்டுகளில் 7 சதவீதம் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால், உணவு உற்பத்தி 90 சதவீதம் வீழ்ச்சியடையும் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது.