நுரை நுரையாக காட்சியளிக்கும் நொய்யல் ஆறு... துர்நாற்றத்தில் தவிக்கும் மக்கள் | KOVAI | RIVER

Update: 2023-06-20 11:11 GMT

கோவை சூலூர் நொய்யல் ஆற்றில் மிதக்கும் நுரை, துர்நாற்றத்துடன் காற்றில் பறந்து செல்வதால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். சூலூர் பட்டணம் பகுதி வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில், கழிவு நீரும் ஆகாயத்தாமரைகளும் நிறைந்து காணப்படுவதால், தண்ணீரில் நுரை எழுந்துள்ளது. பனி போல் படர்ந்து, துர்நாற்றத்துடன் காற்றில் பறந்து செல்வதால், தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்