தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 85 % இடங்களை நிரப்ப மாநில அரசு கலந்தாய்வு நடத்துகிறது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசுக்கான இடங்களையும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களையும் நிரப்புகிறது. இதுவே அரசு மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடமான 15 % இடங்களுக்கும், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசு நிறுவனங்களில் 100 % இடங்களுக்கு மத்திய அரசின் கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படுகிறது. இப்போது இந்த நடைமுறையில்தான் மத்திய அரசு மாற்றம் கொண்டு வருகிறது. தேசிய மருத்துவ ஆணையம் அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள 100 % எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் மத்திய அரசே பொது கலந்தாய்வு நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.