மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமாருக்கு முன்னாள் முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட்டால், ஒரு சொட்டு நீர் கூட தமிழ்நாட்டிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நிலையை கர்நாடகா மாநில துணை முதல்வருக்கு புரிய வைத்து, மேகதாது திட்டத்தினை கைவிட வலியுறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.