"திராவிட மாடல் ஆட்சியை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது" - அமைச்சர் பொன்முடி பேச்சு
திராவிட மாடல் ஆட்சியை எந்தச் சூழ்நிலையிலும் எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது என்று அமைச்சர் பொன்முடி கூறினார். விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு கால சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் பொன்முடி பேசும்போது, திராவிட மாடல் ஆட்சியை எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது என்று கூறினார்.