"ஒரு நாள் டிராமா வேண்டாம்..." - அதிகாரிகளை கடிந்து கொண்ட ஆட்சியர்

Update: 2023-06-02 01:43 GMT

ஆய்வு பணியின் போது, அதிகாரிகளிடம் ஒரு நாள் டிராமா வேண்டாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட கோவூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பிளீச்சிங் பொடி அதிகளவில் போடப்பட்டிருந்ததை கண்ட மாவட்ட ஆட்சியர், ஒரு நாள் டிராமா வேண்டாமெனவும், தேவையானதை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள் எனவும் அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்