வந்தனா கொலையின் ஈரம் காய்வதற்குள் அடுத்த பரபரப்பு.. கேரளாவை நடுங்க வைக்கும் அடுத்தடுத்த சம்பவம்
கேரளாவின், இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் மதுபோதையில் சாலையில் சென்றவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவருக்கும், பிரவீனுக்கும் மோதல் ஏற்படவே பிரவீன் தாக்கப்பட்டார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த பிரவீனை சிகிச்சைக்காக நெடுங்கண்டம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, மதுபோதையில் இருந்த பிரவீன் சிகிச்சைக்கு வர மறுத்து தரக்குறைவாக பேசியதோடு, செவிலியரை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரவீனின் கை மற்றும் கால்களை கட்டி வைத்து செவிலியர்கள் சிகிச்சையளித்த நிலையில், மேல்சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு போலீசாரால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட கைதி, மருத்துவரை கொலை செய்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் அரங்கேறிய இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.