அடுத்த மூவ்... தளபதி விஜய் பயிலகம் தொடக்கம் - எங்கெங்கு தெரியுமா?

Update: 2023-07-16 02:42 GMT

முன்னாள் முதலமைச்சர் காமராஜரைப் போற்றும் வகையில், அவரது பிறந்தநாளில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் 'தளபதி விஜய் பயிலகம்' தொடங்கப் போவதாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருந்தார். அந்த வகையில், முதற்கட்டமாக சென்னை கொடுங்கையூரில் உள்ள முத்தமிழ் நகரில், முதல் பயிலகம் திறக்கப்பட்டது. இதனை, விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார். பின்னர், மாணவர்களுக்கு எழுது பொருட்கள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் காமராஜர் பிறந்த‌நாளை விஜய் ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், 14 இடங்களில் 'தளபதி விஜய் பயிலகம்' என்ற பெயரில் பயிலகங்கள் திறக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்