புதிய வந்தே பாரத் ரயில்கள் - அறிவிப்பு வெளியாகுமா? | Vande Bharat Expresss | Ashwini Vaishnaw
வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், சுமார் 300 முதல் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஸ்லீப்பர் படுக்கைகளுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரயில் 2024 முதல் காலாண்டில் வெளியிடப்படும் என கூறியுள்ளார். மேலும், 2025-26 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள சந்தைகளுக்கு வந்தே பாரத் ரயில்களை ஏற்றுமதி செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.