உலகக்கோப்பை தகுதிச்சுற்று லீக் போட்டி நேபாளத்தை வென்ற நெதர்லாந்து

Update: 2023-06-25 16:47 GMT

உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரின் லீக் போட்டியில் நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து வென்றது. ஹராரேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நேபாளம், 167 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நெதர்லாந்து வேகப்பந்துவீச்சாளர் வான் பீக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடிய நெதர்லாந்து, 28வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நெதர்லாந்து தொடக்க வீரர் மேக்ஸ் 90 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்