TC கொடுக்காமல் இழுத்தடித்த தனியார் பள்ளி நிர்வாகம் - விரக்தியில் மாணவன் விபரீதம்
நெல்லையில் மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்து, மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக, தனியார் பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பை அருகேயுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த விவசாயி பூவலிங்கம் என்பவரின் மகன், வி.கே.புரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், கடந்த 2020 - 2021 ஆண்டு 10ம் வகுப்பு படித்து வந்தார்.
அப்போது, கொரோனா காரணமாக, தமிழக அரசு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து மாணவன், பள்ளிக்கு சென்று மாற்றுச் சான்றிதழ் கேட்டபோது, பள்ளி சார்பில் தர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த மாணவன், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தான் படித்து வந்த பள்ளிக்கே சென்று, விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புகாரின் பேரில், தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் ராபர்ட், ஆனி மெட்டீல்டா ஆகியோர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.