கால்நடைகளை தாக்கும் மர்ம விலங்கு... 4 ஆண்டுகளாக நவம்பர், டிசம்பர் மாதத்தில் வரும் மர்ம விலங்கு? - கிராம மக்கள் அச்சம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், காரனூர் கிராமத்தில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த விலங்கு தாக்கியதில் 20-க்கும் மேற்பட்ட கோழிகள், நாய் உள்ளிட்டவை உயிரிழந்தன.
இது குறித்து அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலரின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விலங்கின் கால் தடம், எச்சம் உள்ளிட்டவற்றை சேகரித்துள்ளனர்.
மேலும், விலங்கின் நடமாட்டம் குறித்து கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்கக் கூடும் என அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதனிடைபே, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை நவம்பர், டிசம்பர் மாதங்களில் இவ்வாறு மர்ம விலங்கு தாக்குதல் நடந்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.