தூக்கத்தில் தாய்.. திடீரென காணாமல் போன கை குழந்தை - அலறவிட்ட சிசிடிவி - அச்சத்தில் பொதுமக்கள்
நேதாஜி நகரை சேர்ந்த வீரபிரதாப் - சோனியா தம்பதியினர் இருவரும் கடற்கரை சாலை, பூங்கா ஆகிய இடங்களில் இளநீர், பொம்மை ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு கை குழந்தை உட்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர். இதனிடையே வீரபிராதப் வெளியூர் சென்ற நிலையில், தமது கடைசி மகனான 3 மாத குழந்தை ஆதித்யா உடன், மிஷின் வீதியில் உள்ள கடை வாசலில் தூங்கியுள்ளார். பின்னர் காலை எழுந்து பார்த்த போது, குழந்தை காணாமல் போனதை கண்ட சோனியா, பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின், பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.