கர்நாடகாவுக்கு அண்ணாமலை பறந்த ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணமா? - கன்னடத்தில் அண்ணாமலை விளக்கம்
- கர்நாடகாவில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பிரசாரத்திற்காக அங்கு ஹெலிகாப்டர்கள் தேவை அதிகரித்திருக்கிறது. பிற மாநிலங்களில் இருந்து ஹெலிகாப்டர்களை வாடகைக்கு அமர்த்துவது அதிகரித்திருப்பதாகவும், 8 இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில், ஹெலிகாப்டரில் உடுப்பி வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து வந்ததாக, காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொரகே குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.