நீலகிரி மாவட்டம் குன்னூர் நடந்த கோயில் குடமுழுக்கு விழாவில், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், படுகரின நடனமாடி மகிழ்ந்தார். கம்மந்து பகுதியில் உள்ள கன்னி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான படுகரின மக்கள் கலந்துகொண்டனர். விழாவில் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்பு கோயில் வளாகத்தில் கூடிய படுகரின மக்களி், பாரம்பரிய நடனமாடினர். கோயிலுக்கு வந்த பக்தர்களும் இசைக்கேற்றவாறு நடனமாடி மகிழ்ந்தனர்.