"மாயமான மகளை மீட்டு தர வேண்டும்""வெளிநாட்டிற்கு கடத்தப்படும் முன்.." பெற்றோர் கதறல்..
வெளிநாட்டிற்கு கடத்தப்படும் முன் மாயமான மகளை மீட்டுத்தரக்கோரி, ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றோர் புகாரளித்துள்ளனர். மணல்மேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் - பூங்கொடி தம்பதியினர் அளித்துள்ள புகார் மனுவில், தங்களது 2வது மகள் சந்தியா கடந்த 9ஆம் தேதி மாயமானதாகவும், அலாவுதீன் என்பவர் தங்களது மகளை கடத்தி சென்றதாக தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். அலாவுதீன் தங்கள் மகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்து விடுவார் என அச்சப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர்கள், மகளை உடனடியாக மீட்டுத்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.