கேரளா ஹாக்கி சங்கத்தினரிடம் உலக கோப்பையை ஒப்படைத்தார் அமைச்சர் உதயநிதி | Hockey World Cup 2023

Update: 2022-12-22 03:03 GMT

ஜனவரி மாதம் ஒடிசாவில் நடைபெறவுள்ள ஹாக்கி உலக கோப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு, ஹாக்கி உலக கோப்பை எடுத்து செல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை வந்த ஹாக்கி உலக கோப்பையை, பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த, நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டனர். பின்னர் ஹாக்கி கோப்பையை கேரளா ஹாக்கி சங்கத்திடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,விளையாட்டு துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்