கேரளாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கொச்சி நகரில் மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இதுபோன்று திருவனந்தபுரம், கோழிக்கோடு நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவையைக் கொண்டுவர இருப்பதாக கொச்சி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த இரு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்டம் ஒன்பது மாதங்களில் தயாராகிவிடும் என்று கொச்சி மெட்ரோ நிர்வாக இயக்குனர் லோக்நாத் பெஹ்ரா தெரிவித்தார்.