மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்வில், மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, அம்மன் சன்னிதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். விருச்சிக லக்னத்தில் சிறப்பு பூஜைகளுடன் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு, மதுரை அரசியாக பட்டம் சூட்டப்பட்டது. வேப்பம்பூ மாலை, ராயர் கிரீடம் அணிவித்து, ரத்தினக் கற்கள் பதித்த செங்கோல் அம்மனிடம் வழங்கப்பட்டது. இதில், பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.