நாடு முழுவதும் உள்ள 2,000 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, மலிவு விலை மருந்தகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 1,000 மலிவு விலை மருந்தகங்களும், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் எஞ்சிய 1000 மலிவு விலை மருந்தகங்களும் நாடு முழுவதும் திறக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 9 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட பிரதமரின் மலிவு விலை மருந்தகங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.....