காமன்வெல்த் விளையாட்டின் கடைசி நாளில் இந்தியா 4 தங்கம் உள்ளிட்ட 6 பதக்கங்களை குவித்தது.
இதன்மூலம் இந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன், பதக்க பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது.
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளில், 178 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 176 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 92 பதக்கங்களுடன் கனடா மூன்றாவது இடத்திலும் உள்ளது.