தவறான உறவால் கர்ப்பமான திருமணம் ஆன பெண்! உயிருடன் புதைத்த குழந்தை - கூடலூரில் அதிர்ச்சி சம்பவம்
கூடலூரில், தவறான முறையில் பிரசவம் பார்த்து இளம் பெண் இறந்த நிலையில், குழந்தையை உயிருடன் புதைத்து உறவினர்கள் நாடகமாடியது அம்பலமானது.
நிமினிவயல் பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற இளம் பெண், கடுமையான ரத்தப்போக்கால் உயிரிழந்ததை அடுத்து, உதகை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதில், வீட்டில் தவறான முறையில் பிரசவம் பார்த்ததில், அந்த பெண் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து கூடலூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருமணத்தை மீறிய உறவால் பிரியா கர்ப்பமான நிலையில், குடும்பத்தினரே பிரசவம் பார்த்ததும், உயிருடன் இருந்த ஏழு மாத குழந்தையை புதைத்து நாடகமாடியதும் கண்டறியப்பட்டது. பின்னர், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், குழந்தையை தோண்டி எடுத்து உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.