பேக் ஃபயர் ஆன 'மது' டோர் டெலிவரி திட்டம்.. டெல்லி துணை முதல்வரை உள்ளே வைத்த CBI - அதிரும் தேசிய அரசியல் களம்

Update: 2023-02-28 09:02 GMT
  • டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 2015 முதல் ஆட்சி யில் தொடர்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகவும், மணீஷ் சிசோடியா துணை முதல்வராகவும் கடந்த 8 ஆண்டு களாக பதவி வகிக்கின்றனர். மணீஷ் சிசோடியா கல்வி, நிதி, ஆயத் தீர்வு ஆகிய துறைகளுக்கான அமைச்சராக இருந்து வருகிறார்.
  • 2021 நவம்பரில் டெல்லி மாநிலத்தில் மதுபான விற்பனை தொடர்பான புதிய கொள்கை உருவாக்கப்பட்டது. மதுபான விற்பனை முற்றிலும் தனியார்மயமாக்கப்பட்டது. இதன் மூலம் மதுபானங்களுக்கான கள்ளச் சந்தையை ஒழித்து, வரி வருவாயை அதிகரித்து, நுகர்வோருக்கான சேவைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டது.
  • ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கு மதுபானங்களை நேரடியாக விநியோகிக்கவும் அனுமதி யளிக்கப்பட்டது. மதுபான விற்பனையகங்களை அதிகாலை
  • 3 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. மொத்தம் 849 விற்பனையகங்களுக்கு லைசென்ஸ் அளிக்கப்பட்டது. இதனால் மதுபான விற்பனை மீதான மாநில வரி வருவாய்
  • 27 சதவீதம் அதிகரித்து, 8,900 கோடி ரூபாயாக உயர்ந்தது.
  • ஆனால் புதிய கொள்கைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறிய சக்சேனா, இது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்தார். தொடர்ந்து 2022 ஆகஸ்ட்டில், மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் 20 இதர இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
  • சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ பதிவு செய்தது. மதுபான விற்பனை நிறுவனம் ஒன்று, சிசோடியாவின் நெருங்கிய சகா ஒருவரின் நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அளித்ததாக சி.பி.ஐ கூறியது.
  • கொரோனா பாதிப்புகளை காரணமாக காட்டி, லைசென்ஸ் கட்டணம் செலுத்துவதில் 144 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக விலக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைப் பற்றி அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
  • இதைத் தொடர்ந்து மதுபான விற்பனைக்கான புதிய கொள்கையை ஆம் ஆத்மி அரசு வாபஸ் பெற்றது. இந்நிலையில் பிப்ரவரி 26 அன்று மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைது செய்துள்ளது.
  • சிசோடியா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி, ஆம் ஆத்மியை களங்கப்படுத்த பாஜக முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்