மணிப்பூரில் கலவரக்காரர்களுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில், பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் உயிரிழந்தார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம், இரண்டு இனக்குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன. இதையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிரோய் என்ற இடத்தில், கலவரக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அசாம் ரைபிள் படையை சேர்ந்த 2 வீரர்கள், ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணிப்பூரில் வன்முறை பாதித்த இடங்களில் கடந்த மே மாதம் 3ம் தேதி இணையதள சேவை துண்டிக்கப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை வரும் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்துவிட்டதால் இணையதள சேவை துண்டிப்பை அகற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.