திருச்சியை சேர்ந்த எல்ஃபின் நிறுவன நிர்வாக இயக்குநர்களான ராஜா மற்றும் அழகர்சாமி ஆகியோர், பணமோசடி செய்த வழக்கில் ஏற்கனவே கைதாகி ஜாமினில் வெளியே வந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி, எல்ஃபின் நிர்வாக இயக்குநர் ராஜாவை, சிறப்பு புலனாய்வு துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர். விசாரணையில் முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தில் வாங்கிய அசையா சொத்துக்கள் பற்றியும், சொத்துக்கள் வாங்க யாரிடம் முன்பணம் கொடுத்துள்ளார் என்பது குறித்தும் ராஜா வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக, சிறப்பு புலனாய்வு துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.