"ஆண், பெண் கருத்தாக்கம் வெறும் பாலுறுப்பை அடிப்படையாக கொண்டதல்ல" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து
தன்பால் திருமணத்துக்கு, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க கோரிய மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. முதல் நாள் விசாரணையின் போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தன்பால் திருமணத்துக்கு, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகாரம் வழங்க வேண்டும் என வாதிட்டார். அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் துஷார் மேத்தா, தன்பால் திருமணத்துக்கு சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகாரம் வழங்கினால், பல்வேறு சட்டங்கள் வழக்கொழிந்து விடும் என்று வாதிட்ட நிலையில், ஆண்- பெண் என்ற கருத்தாக்கம் வெறும் பாலுறுப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டதில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.