மகாராஷ்ட்ரா மாநில 2023-24 பட்ஜெட் தாக்கல் - வெளிவந்த அதிரடி அறிவிப்புகள்!
- மகாராஷ்டிரா சட்டமன்றத்தில், ஏக்நாத் ஷிண்டே அரசு 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
- இதில் விவசாயிகளுக்கு தலா ஆறாயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
- இதற்கு ஆறாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ரேசன் அட்டை கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவான பிறகு 75 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்கும் லேக் லட்கி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு அளிக்கப்படும் அதிகபட்ச தொகை ஒன்றரை லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், 2023-24ல் 95 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
- இதன் மூலம் மொத்த கடன் சுமை 7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.