"மத்திய பட்ஜெட்டை திருத்தி அமைக்க வேண்டும்" - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கோரிக்கை
மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில மத்திய பட்ஜெட்டை அரசு திருத்தி அமைக்க வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் அலசல் குறித்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
மத்திய அரசு மனமுவந்து மாநிலங்களுக்கான நிதிகளை வழங்க வேண்டும் என்றும் மாநில அரசின் ஏராளமான வரிகள் மத்திய அரசுக்கு சென்று விட்டதாகவும் ப.சிதம்பரம் அப்போது கூறினார்.
மத்திய பட்ஜெட்டை திருத்தி ஏழை எளிய மக்களுக்கு நிதியை ஒதுக்கி வரிச்சலுகை அளிக்க வேண்டும் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.