கோவையில் லூ லூ. "விடமாட்டோம்" தலைமை செயலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்..
கோவையில் திறக்கப்பட்ட லூ லூ மார்க்கெட்டிற்கு எதிராக சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில், ஏராளமான வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் தலைமைச் செயலகம் நோக்கி சென்றனர். அப்போது, சேப்பாக்கத்தில் அவர்களை தடுத்தி நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அப்போது பேசிய, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், கோவையில் லூ லூ மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளதால், சிறு வணிகம் பாதிக்கப்படும் என்றும், எனவே அதை தடை செய்ய வேண்டும் எனவும் கூறினார்...